செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 18 ஜூலை 2018 (11:47 IST)

தஸபெல்லா ஹோட்டலில் சிக்கிய மேலும் ஒரு நடிகர்: ஸ்ரீ ரெட்டி

தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தெலுங்கு திரையுலகை அதிர வைத்த, நடிகை ஸ்ரீரெட்டி தமிழ்  திரையுலக பிரபலங்கள் மீது அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவில் அடுத்து நடிகர்களின் பெயரை வெளியிட்டு வருகிறார். இதனை தொடர்ந்து மேலும் ஒரு பிரபலம்  சிக்கியுள்ளார்.
 
தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக கூறி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் மூலம் அவருக்கு உலக அளவில் வெளிச்சம் கிடைத்தது. இதையடுத்து தற்போது தமிழ் திரைத்துறையினர் மீது தொடர்ச்சியான புகார்களைக் கூறி  வருகிறார். அதன்படி அவர் வெளியிட்ட பட்டியலில் இயக்குநர் முருகதாஸ், ராகவா லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஒரு சிலரின் பெயர்கள் இடம்பெற்றன.
 
இதையடுத்து தன் பெயரை நடிகை ஸ்ரீரெட்டி பயன்படுத்தியதால் அவர் மீது வழக்கு தொடர்வேன் என்று இயக்குநர் சுந்தர்.சி தெரிவித்திருந்தார். மற்றவர்கள் ஸ்ரீரெட்டியின் புகார்கள் குறித்து மறுப்போ, விளக்கமோ இதுவரை தெரிவிக்கவில்லை.
 
இந்நிலையில் சென்னை வந்தடைந்த ஸ்ரீரெட்டி இதுகுறித்து பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், அவரின் பட்டியலில் அடுத்து நடிகர் ஆதி இடம்பெற்றிருப்பதாக தெரிவித்தார். மேலும் ஆதி நல்ல மனிதர் தான் என்று கூறிய ஸ்ரீரெட்டி, தஸபெல்லா ஹோட்டலில் எங்களுக்குள் நடந்த விஷயம் ஒரு முறைதான் என்றாலும் அதுவும் தவறுதான், ஆதலால் அதை மறைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.