புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 30 ஜனவரி 2021 (18:15 IST)

விஜய்யின் ’’வாத்தி கம்மிங் ’’பாடல் குறித்து அஸ்வின் பாராட்டு!!

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் குறித்து அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

கடந்த 2020 ஏப்ரல் மாதம் ரிலீஸாகியிருக்க வேண்டிய மாஸ்டர் படம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தியேட்டர்களில் ரிலீஸாகி பெரும் வெற்றிப் பெற்றது.

இப்படத்தின் வசூல் உலகளவில் பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளது. ரூ.200 கோடி கிளப்பில் விஜய்யின் மாஸ்டர் இணைந்துள்ளது.

இந்நிலையில், மற்ற ஹீரோக்களும் விஜய்யைப் பின்பற்றி தங்களின் படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளனர்.

நீண்ட காலத்திற்குப் பிறகு மாஸ்டர் படம் ரிலீஸானாலும் பெரும் வெற்றி பெற்றுள்ளதால் மொத்தப் படக்குழுவும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.

மீண்டும் விஜய், லோகேஷ் கனகராஜ் இணைந்து இன்னொரு பிரமாண்ட படம் உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இதற்குத்தான் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

மேலும் , இப்படத்தை உலகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்கள் அனைவரும் பார்ப்பதற்காக மாஸ்டர் படம் ஒடிடியில் ரிலீஸாகவுள்ளதாக விஜய் கூறியிருந்தார் இப்படத்தை ரசிகர்கள் ஒடிடியில் பார்த்துக் கொண்டாடி வருகிறார்கள்.

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் தற்போது, சுமார் 7 மில்லியனுகு அதிகமான பேர் பார்த்துள்ளனர்.  இப்பாடலில் விஜய்யின் நடனம் பலரையும் கவர்ந்துள்ளது.  இப்பாடலை 24 மணிநேரத்தில் 58 லட்சத்திற்கு அதிகமானவர்களும், தற்போதுவரை 7 மில்லியனுக்கும் அதிகமான பேர் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் இப்பாடல் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் வேற மாறி எனப் பதிவிட்டு, இப்பாடலின் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளிட்டுள்ளார். இதற்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.