செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 30 ஜனவரி 2021 (11:10 IST)

கிரிக்கெட் வீரர் பொல்லார்ட் இறந்துவிட்டதாக பரவிய வீடியோ!

யுடியூபில் கிரிக்கெட் வீரர் பொல்லார்ட் இறந்துவிட்டதாக ஒரு வீடியோ வெளியானதால் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக இப்போது செயல்பட்டு வரும் கைரன் பொல்லார்ட் உலகம் முழுவதும் உள்ள டி 20 தொடர்களில் அதிகளவில் விளையாடி வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டதாக யுடியூபில் ஒரு வீடியோ பரவி அதிர்ச்சியைக் கிளப்பியது. இந்த செய்தி உண்மை என நம்பி அனைவரும் அதைப் பகிர ஆரம்பித்தனர்.

இந்நிலையில் அந்த செய்தி பொய்யானது எனவும் பொல்லார்ட் அபுதாபியில் ஒரு கிரிக்கெட் தொடர் விளையாடிவருகிறார் என்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. அதன் பின்னரே ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.