திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 13 செப்டம்பர் 2023 (10:03 IST)

அசோக்செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம்.. வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலகின் இளம் நடிகர் அசோக் செல்வன் மற்றும் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோர் திருமணம் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது
 
அந்த வகையில் சற்று முன்னர் திருநெல்வேலியில் உள்ள பண்ணை வீட்டில் இந்த திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் ரம்யா பாண்டியன் உள்பட கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் செல்வனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
 
 இந்த திருமண புகைப்படம் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில் வெளியான போர் தொழில் உள்பட பல ஹிட் படங்களில் அசோக் செல்வன் நடித்துள்ளார் என்பதும் தற்போது கூட அவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran