இப்போதைக்கு திருமணம் இல்லை… நடிகை தமன்னா ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் ரவிகிருஷ்ணா நடித்த கேடி படத்தின் மூலம் அறிமுகமானார் தமன்னா. ஆனால் அவருக்கான கவனிப்பு என்பது கல்லூரி மற்றும் அயன் ஆகிய படங்களின் மூலம்தான் கிடைத்தது. அதையடுத்து வரிசையாக முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து டாப் நடிகையானார். ஆனால் ஒரு கட்டத்தில் புது நாயகிகளின் வரவுக்கு பிறகு தமன்னாவின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.
அதனால் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்த அவர், சமீபத்தில் ஜெயிலர் படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார். அவர் படத்தில் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹிட் ஆனது.
இப்போது பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவோடு காதலில் இருக்கிறார் தமன்னா. இதை இருவருமே வெளிப்படையாக அறிவித்துள்ளார். ஆனால் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார். இப்போதைக்கு படங்களில் நடிப்பதுதான் பிடித்தமான வேலை எனக் கூறியுள்ள அவர் கண்டிப்பாக ஒருநாள் திருமணம் செய்துகொள்வே எனக் கூறியுள்ளார்.