செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: ஞாயிறு, 10 மார்ச் 2024 (10:46 IST)

மேலும் ஒரு ஆபாச நடிகை மர்ம மரணம்.. மூன்றே மாதங்களில் 4 ஆபாச நடிகைகள் மறைவு..!

2024 ஆம் ஆண்டில் மட்டும் ஏற்கனவே மூன்று ஆபாச நடிகைகள் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ள நிலையில் தற்போது அமெரிக்காவில் இன்னொரு ஆபாச நடிகை மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஆண்டில் மூன்றே மாதத்தில் நான்கு ஆபாச நடிகைகள் இளம் வயதிலேயே மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதாகவும் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது

அமெரிக்காவை சேர்ந்த ஆபாச நடிகை சோபியா லியோன் என்பவர் இன்று அவரது வீட்டில் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 26 வயதான இவர் பல ஆபாச திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் திடீரென அவர் மர்மமான முறையில் மரணமடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சோபியா லியோன் மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று அவரது வளர்ப்பு தந்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த ஆண்டில் மட்டும் ஆபாச படங்களில் நடித்த நான்கு நடிகைகள் இளம் வயதிலேயே உயிரிழந்துள்ளதை அடுத்து இந்த மரணங்களுக்கு இடையே தொடர்பு உண்டா என்பது குறித்து விசாரணை செய்ய காவல்துறை முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


Edited by Siva