ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 17 ஜூலை 2023 (09:31 IST)

நான் ஆபாச நடிகைதான்… ஆனால்? – அமைச்சர் ரோஜாவுக்கு பதிலடி கொடுத்த சன்னி லியோன்!

ஆந்திரா சினிமாவின் முன்னணி நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் தன் வாராஹி யாத்திரையின்போது, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை விமர்த்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சரும் நடிகையுமான ரோஜா “பவன் கல்யாண் வந்து ஜெகனுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத் தருகிறார். இது சன்னி லியோனுக்கு வேதம் ஓதியது போல் இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

இதையடுத்து ரோஜாவின் கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் இப்போது தன்னைப் பற்றிய கமெண்ட்டுக்கு சன்னி லியோன் பதிலளித்துள்ளார். அதில் “நான் ஆபாசப் பட நடிகைதான். ஆனால் நான் என் கடந்த காலத்தை நினைத்து எப்போதும் வருத்தப்பட்டதில்லை.  நான் எதை செய்ய விரும்புகிறேனோ அதை வெளிப்படையாக செய்கிறேன். உங்களைப் போல அல்ல.

உங்களுக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், நான் ஆபாச உலகை விட்டு வெளியே வந்துவிட்டேன். ஆனால் நீங்கள் இன்னும் வரவில்லை” எனக் கடுமையான சொற்களால் பதிலளித்துள்ளார்.