நடிகர் விமல் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு
நடிகர் விமல் நடிக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பசங்க படத்தில் மூலம் விமல் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
அதன்பின், களவாணி, தூங்கா நகரம், எத்தன், வாகை சூட வா, மாட்டுத்தாவணி, கலகலப்பு, உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
இந் நிலையில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் துடிக்கும் கரங்கள். இப்படத்தில் மனிஷா என்பவர் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.
இப்படத்தை ஓடியன் டாக்கீஸ் சார்பாக கே.அண்ணாத்துரை தயாரிக்கிறார்.
இப்படத்தின் விஜய்யின் போக்கிரி படத்திற்கு இசையமைத்த மணிசர்மாவின் உதவியாளரும் அவரது சகோதரருமான ராகவ் பிரசாத் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் 45 நாட்கள் முடிந்துள்ள நிலையில், அடுத்தகட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனன தெரிகிறது.