திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 25 ஏப்ரல் 2022 (21:21 IST)

நடிகர் விமல் மீது தயாரிப்பாளரின் மகள் மோசடி புகார்

vimal
பிரபல தயாரிப்பாளரின் மகள் நடிகர் விமல் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

 நடிகர் விமல் மீது தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன்,  திரைப்பட வி நியோகஸ்தர் கங்காதரன் பண மோசடிப்புகார் அளித்துள்ள நிலையில், விமல் நடிப்பில் வெளியான மன்னர் வகைறா படத்தின் தயாரிப்பாளர் மறைந்ததிருப்பூர் கணேசனின் மகள் ஹேமா இன்று சென்னை போலீஸார் கமிஷனர் அலுவலத்தில் விமல்  மீது புகாரளித்துள்ளார்.

அதில் என் தந்தை கணேசன் சிறு தொழில் செய்து தன்னை ஒரு தொழிலதிபராக நிலை நிறுத்திக் கொண்டவர், அவரிடம் சினிமா ஆசை காட்டில் மூளைச் சலவை செய்து மன்னர் வகையறா என்ற படத்தை துவக்கை வைத்தவர் நடிகர் விமல். படத்தின் பட்ஜெட் ரூ.5 கோடி அதில் ரூ.1.5 கோடி முதலீடு செய்தால், மீதியை சினிமா சிலரிடம் கடனாகப் பெறலாம் என உத்தரவாதம் அளித்த விமலின் பேச்சை நம்பி என் தந்தை இப்படத்தின் தயாரிப்புகளை மேற்கொண்டார். அதில் விமலுக்கும் நாயகிக்கும் சண்டை வரவே என் அப்பா படப்பிடிப்பை தொடர் விருப்பமின்றி திருப்பூர் வந்துவிட்டார்.

இப்படத்தின் தன் எதிர்காலம் இருப்பதாக கூறிய விமல் மீண்டும் அப்பாவை அணுகி, மீண்டும் படப்பிடிப்பை தொடங்க வைத்தார்.ஆனால் விமர் முறைப்படி படப்பிடிப்பை நடத்தவில்லை. சங்கத்தின் இதுகுறித்து அப்பா புகார் அளித்தும் அவரது புகாரை ஏற்கவில்லை. எனவே அப்பா தான் முதலீடு செய்ய பணத்தை விமலிடம் திருப்பக் கேட்டார். அவர் தராதரால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இப்படத்தை தொலைக்காட்சி உரிமைக்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், விமல் இப்பணத்தை திரும்ப தருவதாக கூறி  நீதிமன்றத்தில்  memorandum of settle ment  தாக்கல் செய்தாரர். இதன்படியும் விமல் திருப்பித்தரவில்லை. இப்படத்தின் தெலுங்கு டப்பிங்க் உரிமையை வேறொருவருக்கு அவர் விற்று விட்டார்.

எனவே மோசடி செய்த விமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  எங்களுக்கு தர வேண்டிய ரூ.1.73,78,000 தொகையை பெற்றுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.