திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (09:46 IST)

அண்ணாத்த பர்ஸ்ட் லுக்… விநாயகர் சதுர்த்தி அன்று வெளியீடு!

ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இப்போது உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து முடிந்தது. ஏற்கனவே தன் சம்மந்தப்பட்ட காட்சிகளை ரஜினிகாந்த் நடித்துக் கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் தீபாவளிக்கு வெளியாக உள்ள அண்ணாத்த படத்தின் முதல் லுக் போஸ்டரை ரஜினி ரசிகர்களுக்கு அளிக்கும் விதமாக விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.