திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (08:41 IST)

பள்ளி மாணவர்களுக்கு கொரோனா! – ஆட்சியர்களுடன் இன்று அவசர ஆலோசனை!

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது குறித்து இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக பல காலமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளிகள் மட்டும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் பள்ளிகளை தொடர்ந்து நடத்துவது, கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து தலைமை செயலாளருடன் மாவட்ட ஆட்சியர்களின் அவசர ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவது குறித்த முக்கிய முடிவுகள் பரிந்துரைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.