லோகேஷ்க்கு கார், சூர்யாவுக்கு வாட்ச், அனிருத்துக்கு என்ன? அவரே அளித்த பதில்!
உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு, கமல்ஹாசன் விலை உயர்ந்த காரை பரிசாக அளித்தார். இதனை அடுத்து ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்திருந்தார் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கார் கொடுத்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கமல்ஹாசன் உங்களுக்கு என்ன பரிசளித்தார் என கேரளாவில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு அனிருத் கூறிய அசத்தல் பதில் தற்போது வைரலாகி வருகிறது
கமல்ஹாசன் எனக்கு விக்ரம் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார் என்று அனிருத் கூறியது தான் அந்த அசத்தல் பதில் என்பது குறிப்பிடத்தக்கது.