1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 ஜூன் 2022 (15:57 IST)

எங்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட அறிவாலயம் அரசுக்கு வரவேற்பு: அண்ணாமலை

annamalai
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து கொடுக்கும் விவகாரத்தில் அண்ணாமலை குறிப்பிட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்காமல் வேறு நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது:
 
கொடுத்தபின் ஏன் கொடுத்தீர்கள் என்று கேட்பதால் எந்த பயனும் இல்லை.  கருப்பு பட்டியலில் வைக்கப்பட வேண்டிய நிறுவனத்திடம் முறைகேடாகப் பணம் பெற்று ஊட்டச்சத்து தொகுப்பு டென்டரை வழங்கப்போவதாக ஆதாரங்களை 
தமிழக பாஜக வெளியிட்டது.
 
 
அந்த டென்டரில் பங்கேற்ற வேறொரு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக செய்தியைப் பார்த்தோம். தமிழக பாஜக வைத்த குற்றச்சாட்டுகளின் எதிரொலியாக வேறு வழியின்றி ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தாலும், எங்கள் குற்றச்சாட்டை ஏற்று  அறிவாலயம் அரசு எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
 
லஞ்ச ஒழிப்புத் துறையில்  தமிழக பாஜக அளித்த புகாரையும்  அறிவாலயம் அரசு விசாரித்து குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும். மேலும் ஆவின் health mixன் நிலை என்ன என்பதையும் அறிவாலயம்  அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்று அண்ணாமலை கூறியுள்ளார்.