செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (15:32 IST)

அனிருத்தின் தாத்தா SV ரமணன் இயற்கை எய்தினார்! திரையுலகினர் அஞ்சலி

அனிருத்தின் தாத்தா எஸ் வி ரமணன் இன்று காலை இயற்கை எய்தினார்.

பழம்பெரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான கே சுப்ரமண்யம் அவர்களின் மகன் எஸ் வி ரமணன். இவரும் அவரது தந்தையைப் போலவே சில படங்களை இயக்கியுள்ளார். அதுபோல தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக தொடர்களையும் இயக்கியுள்ளார். இசையமைப்பாளராகவும் சில படங்களில் பணியாற்றியுள்ளார். ரேடியோ நாடகங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று வயது மூப்பு காரணமாக அவர் காலமானார். இந்த செய்தி வெளியானதை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  இவர் தற்போதைய முன்னணி இசையமைப்பாளரான அனிருத்தின் தாத்தா ஆவார்.