இந்த அமலா பாலுக்கு வேற வேலையே இல்லையா?

Last Modified திங்கள், 17 டிசம்பர் 2018 (12:28 IST)
எவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்துகொண்டாரோ அவ்வளவு சீக்கிரம் திருமண வாழ்க்கைக்கு  முற்றுப்புள்ளி வைத்தவர் நடிகை அமலா பால். சமீபத்தில் இவர் நடித்திருந்த ராட்சசன் படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.


 
தற்போது அறிமுக இயக்குநர் வினோத் கே.ஆரின் 'அதோ அந்த பறவை போல', மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கும் 'ஆடை', மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜுடன் 'ஆடுஜீவிதம்' போன்ற  படங்களில் நடித்து வருகிறார் அமலா பால். 
 
இந்நிலையில் தற்போது அமலா பாலின் புதிய படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவ்வப்போது தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வரும் அமலா, இந்த முறை வெளியிட்டிருக்கும் படமோ ரசிகர்களிடம் பேரதிர்ச்சியை கிளப்பியுள்ளது. 
 
இந்தமுறை கவர்ச்சிக்கு முட்டு போட்டு புகைப்பிடிக்கும் கறுப்பு வெள்ளை படத்தை வெளியிட்டிருக்கிறார் அமலா. இவர் ஏற்கனவே திருட்டு பயலே படத்துக்காக புகைப்பிடித்து, புகையை மூக்கு வழியாக வெளியிடும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையில் சிக்கி வைரலானது குறிப்பிடத்தக்கது.

  


இதில் மேலும் படிக்கவும் :