ஆடை படத்தில் புது முயற்சி - இயக்குனரை பாராட்டிய அமலா பால்

Aadai, Rathna Kumar, Amala Paul
Last Modified வியாழன், 22 நவம்பர் 2018 (15:40 IST)
‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ரத்னகுமார் அடுத்ததாக அமலா பாலை வைத்து ஆடை என்ற படத்தை இயக்கி வருகிறார்.
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். அண்மையில் இவரது நடிப்பில் ராச்சசன் படம் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து , ஆடுஜீவிதம் ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதற்கிடையில் பாலிவுட்டில் பஞ்சாபி பெண்ணாகவும் ஒரு  படத்தில் நடிக்கிறார். மேலும், அதோ அந்த பறவை போல என்ற புதிய படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காடுகளைச் சுற்றிலும் படமாக்கப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் ஆடை நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த போஸ்டரில் ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். மேலும் அமலா பாலின் உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன.
 
இந்த நிலையில், ஆடை படத்தில் கள இசையை பதிவு செய்வதாக படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார். கலைஞர்களின் மொழிப் பிரச்சனை, படப்பிடிப்பு சூழுலை கருத்தில் கொண்டு படங்களில் பொதுவாக கள இசையை பயன்படுத்துவதில்லை. 
 
இந்த நிலையில், அதனை சவாலாக எடுத்துக் கொண்டு ஆடை படக்குழு கள இசையை பதிவு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது நடிகை அமலா பாலுக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் அமையுமாம். 
 
இதுகுறித்து இயக்குனர் ரத்னகுமார் அவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
 
ஆடை படத்தில் நேரடி இசை. கள இசைக்காக நாம் செல்லும் போது, வசனங்களை நினைவில் வைத்தல், உச்சரிப்பு, நடை, செட் அமைதி என படக்குழுவிடம் இருந்து 100 சதவீத ஒத்துழைப்பு தேவை என்பது சவாலான ஒன்று. சவாலை ஏற்றுக் கொள்கிறோம். என்று குறிப்பிட்டுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :