வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (14:39 IST)

அஜித்தின் அடுத்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை!

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய படத்தில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலனும் இணைந்து நடிக்கவுள்ளார்.


 
சிவா - அஜித் கூட்டணியில் உருவான " விஸ்வாசம் ‘’ படம் வரும் பொங்கல் அன்று வெளியாகவுள்ளது. அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள  இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. 
 
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படம் பற்றிய செய்தி சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குனர் எச். வினோத் இயக்கவுள்ளார். இந்தப் படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இந்தப் படம் அமிதாப்பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். இந்தப் படத்தில் அஜித்திற்காக கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக இயக்குனர் வினோத் கூறியுள்ளார். 
 
தற்போது வந்த தகவல்படி இந்தப் படத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நாயகியான வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.