வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (16:27 IST)

உதவி இயக்குனராக இருந்த நயன்தாரா ! - இதுவரை யாருக்கும் தெரியாத ரகசிய உண்மை!

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களும், ஜோடி போட்டு நடிக்க விரும்பும் நடிகையாக இருப்பவர்  நடிகை நயன்தாரா.  இவர் அஜித்துடன் 'விஸ்வாசம்' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக இயக்குனர்  அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 63 படத்திலும் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.  


 
இதற்கிடையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கவுள்ள ந 'இந்தியன் 2 ' படத்திலும் நடிக்க நயன்தாராவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் ஒரு சில காரணங்களால் நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக தகவல் வெளிவந்தது . 
 
இந்நிலையில்  தற்போது நயன்தாரா பற்றிய ஒரு உண்மை கசிந்துள்ளது அதாவது, 'விஸ்வாசம்' படத்தின் ஸ்டில் போட்டோகிராபராக இருந்த சிற்றரசு எனபவர் இதுவரை நயன்தாரா பற்றி யாரும் வெளியிடாத ஒரு ரகசியத்தை பிரபல ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
 
சிற்றரசு  கூறுகையில் ;லேடி சூப்பர் ஸ்டார் நயன் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் அதிகாரப்பூர்வமாக இல்லை என்பதையும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஒருநாள் படப்பிடிப்பிற்கு வரும் போது, சில ஆலோசனைகளை நயன்தாரா வழங்கினாராம் . அவரது தகவல்கள் மிகவும் உதவிகரமாக இருந்ததாம். அடுத்த ஒரு வாரம் எந்தவித படப்பிடிப்பும் அவருக்கு இல்லாததால்... விஷ்ணுவிடம் தான் உதவி இயக்குநராக இருக்கட்டுமா? என்று கேட்டுள்ளார். இதற்க்கு அவரும் ஓகே சொல்ல சில நாட்களாக  உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் நயன்தாரா.