திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : புதன், 27 மே 2020 (21:14 IST)

அஜித்தை எதிர்க்கும் நடிகர் சிக்ஸ் பேக்...

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்குப்  பிறகு அஜித், ஹெச், வினோத் கூட்டணி வலிமை என்ற படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

இப்படத்தை காலா படத்தில் நடித்த ஹியூமா குரேஷியும் , வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் படக்குழு இதுபற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இதற்கிடையே கார்த்த்கேயா தனது உடலை மேலும் பிட்டாக வைப்பதற்காக சிக்ஸ் பேக் வைக்கப்போவதாகவும், குறிப்பாக வலிமை படத்தில் நடிப்பதற்காகவே அவர் இதை செய்கிறார் என தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கார்த்திகேயா கூறியுள்ளதாவது,   ஊரடங்கு நமது திட்டங்களை மாற்றிவிட்டது. ஆனால் லட்சியத்தை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.