வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 22 மே 2020 (17:32 IST)

மாஸ்க் அணிந்து மருத்துவமனை வந்த அஜித்-ஷாலினி: இண்டர்நெட்டில் வீடியோ வைரல்

மாஸ்க் அணிந்து மருத்துவமனை வந்த அஜித்-ஷாலினி
தல அஜித் மற்றும் அவருடைய குடும்பத்தினர் சாதாரணமான நாட்களிலேயே தனிமையை விரும்புவார்கள் என்பதும் பொதுவாக அவர்களை பொது இடத்தில் அதிகம் பார்க்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகவும் அத்தியாவசியமான இடங்களுக்கு மட்டுமே அஜித் தனது குடும்பத்தினர்களுடன் வெளியே வருவார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த கொரோனா விடுமுறையில் அஜித் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டை விட்டே வெளியே வரவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் இன்று அஜித்தும் அவருடைய மனைவி ஷாலினியும் மருத்துவமனை ஒன்றுக்கு வந்து சென்றதாகவும் அவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இன்டர்நெட்டில் வைரல் ஆகி வருகிறது இதனை உறுதி செய்வதாகவும் கூறப்படுகிறது. 
 
மாஸ் அணிந்து அஜித்-ஷாலினி எதற்காக மருத்துவமனை வந்தார்கள் என்று தெரியவில்லை என்றாலும் இந்த வீடியோவை தல ரசிகர்கள் இன்டர்நெட்டில் வைரல் ஆக்கி வருகின்றனர்.