1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 11 ஜனவரி 2019 (19:49 IST)

தல அஜித் தான் என்னோட கிரஷ்..! அஜித் ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிய யாஷிகா..!

சிவா – அஜித் கூட்டணியில் வந்த எல்லா படங்களுமே ஏதாவது ஒரு சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாக்கப்படும்.



அந்த வகையில் வேதாளம் தங்கச்சி சென்டிமென்ட், வீரம் தம்பி சென்டிமெண்ட் என்றால் விஸ்வாசம் மகள் சென்டிமெண்ட்டை மையமாக வைத்து நேற்று உலகம் முழுவதும் வெளியாகி சூப்பர் ஹிட் சாதனையை படைத்துவருகிறது.
 
அஜித்திற்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து யோகி பாபு , தம்பி ராமைய்யா , விவேக், கோவை சரளா என மிகப்பெரிய காமெடி பட்டாளமே ஒன்று கூடி நடித்துள்ளனர். 


 
இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தை பற்றியும் தல அஜித்தை பற்றியும் ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார். பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த். அப்பதிவில் தல அஜித் தனது மேன்லி CRUSH என்றும் பதிவு செய்திருக்கிறார் யாஷிகா. மேலும் விஸ்வாசம் படத்திற்கு டிக்கெட் கிடைத்துவிட்டது என கூறியுள்ளார்.
 
இதற்கு பல நெட்டிசன்கள் அவரை கலாய்த்து திட்டி தீர்த்து வருகின்றனர்.