திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (09:17 IST)

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அஜித் ரசிகர் - "துணிவு" இரண்டாவது மரணம்!

இந்த பொங்கல் விடுமுறையில் தமிழ் சினிமாவின் உட்ச நட்சத்திரமான அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் துணிவு.  எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இப்படத்தை அஜித் ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி தீர்த்தனர். 
 
படம் வெளியான அன்று சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கத்தில் படம் பார்க்க சென்ற 19 வயது இளைஞர் பரத் என்பவர் டேங்கர் லாரி மீது ஏறி ஆடியபோது தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த உயிரிழப்பு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் தற்போது வீரபாகு என்ற தூத்துக்குடியை சேர்ந்த திவீர அஜித் ரசிகர் மது அருந்திவிட்டு தனது குடும்பத்தினரோடு படம் பார்க்க சென்றுள்ளார். அவர் குடித்திருப்பதால் பவுன்சர்கள் வீரபாகுவை திரையரங்கிற்குள் அனுமதிக்காமல் குடும்பத்தினர் முன் அசிங்கப்படுத்தியதக கூறப்படுகிறது. இதனால் வீட்டிற்கு வந்ததும் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்வம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.