1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : வியாழன், 19 ஜனவரி 2023 (16:36 IST)

வாரிசு படத்தின் வசூல் கணக்கை கிண்டல் செய்த திருப்பூர் சுப்ரமண்யன்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில்  வெளியான  படம் வாரிசு. இப்படத்தில் இவருடன் இணைந்து ராஷ்மிகா, குஷ்பு,  பிரகாஷ்ராஜ், சரத்குமார் உள்ளிட்ட  நடிகர்கள் நடித்திருந்தார். இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார். தில்ராஜு தயாரித்துள்ளார். எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் வசூலில் சாதனை படைத்து வருவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்புகளாக வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட கணக்கின் படி 7 நாட்களில் 210 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக அறிவித்தது. இந்த கணக்கு நம்பமுடியாததாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமண்யன் “அவர்கள் இந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை 300 கோடி வசூல் என சொல்வார்கள். அதையும் படிச்சுக்குங்க” என கேலி செய்யும் விதமாக பேசியுள்ளார்.