செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 11 ஜனவரி 2023 (08:36 IST)

விஜய் பேனரை கிழித்த அஜித் ரசிகர்கள்; அஜித் பேனரை கிழித்து பழிவாங்கிய விஜய் ரசிகர்கள்!

Thunivu Vs Varisu
இன்று துணிவு, வாரிசு ஒரே நாளில் வெளியாகி உள்ள நிலையில் அஜித், விஜய் ரசிகர்களிடையே மோதல் எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2014க்கு பிறகு அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களிடையே மோதல் ஏற்படலாம் என்பதால் துணிவு படத்தை நள்ளிரவு 1 மணிக்கும், வாரிசு படத்தை அதிகாலை 4 மணிக்கும் திரையரங்குகள் வெளியிட்டன.

இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படத்திற்கு சென்ற அஜித் ரசிகர்கள் அங்கிருந்து வாரிசு பேனர்களை கிழித்து கூச்சலிட்டனர். இதற்கு பழிவாங்கும் விதமாக காலை 4 மணிக்கு வாரிசு படத்திற்கு வந்த விஜய் ரசிகர்கள் அங்கிருந்த துணிவு பட பேனர்களை கிழித்து கூச்சலிட்டு கொக்கரித்தனர்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K