1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 11 ஜனவரி 2023 (08:20 IST)

தென்காசியில் துணிவு ரிலீஸ் இல்ல!; தியேட்டரை உடைத்த ரசிகர்கள்!

தமிழ்நாடு முழுவதும் அஜித்குமார் நடித்துள்ள துணிவு படம் வெளியாகியுள்ள நிலையில் தென்காசியில் எந்த திரையரங்கிலும் படம் வெளியாகவில்லை.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த துணிவு திரைப்படம் இன்று (ஜனவரி 11) உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் அடுத்த சில நாட்களுக்கு படம் முழுவதும் புக்கிங் ஆகியுள்ளது.

இன்று நள்ளிரவு 1 மணிக்கே படம் ரிலீஸான நிலையில் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களாக வந்துக் கொண்டிருக்கிறது. ஆனால் தென்காசி மாவட்டத்தில் எந்த திரையரங்கிலும் துணிவு ரிலீஸாகவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கடைசி நேர ரிலீஸ் பிரச்சினை காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், காலை காட்சிகள் முதல் படம் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை ரோகிணி திரையரங்கில் படத்திற்காக நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் கண்ணாடி கதவில் மோதிக் கொண்டு நின்றதால் கண்ணாடி கதவு சில்லு சில்லாக உடைந்தது. அதையும் பொருட்படுத்தாமல் உடைந்த கண்ணாடி துண்டுகள் மீதும் ஏறி சென்று படம் பார்க்க சென்றுள்ளனர் ரசிகர்கள்.

Edit By Prasanth.K