அஜித்துக்காக ஸ்பை த்ரில்லர் கதையை உருவாக்கும் மகிழ் திருமேனி!
அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போவது மகிழ் திருமேனி என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் சமீபத்தில் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில் அஜித்துக்காக மகிழ் திருமேனி ஒரு ஸ்பை த்ரில்லர் கதையை உருவாக்கி சொல்லியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மகிழ் திருமேனி ஆக்ஷன் படங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.