திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 4 ஆகஸ்ட் 2018 (15:50 IST)

ஹிட்லராக நினைத்தார்! ஹிட்லராகவே மாறினார்! ஐஸ்வர்யா

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பிக்பாஸ் 2 வின் பதினாறு போட்டியாளர்களில் மமதி சாரி, அனந்த் வைத்தியநாதன், ரம்யா, நித்யா உள்ளிட்டோர் எலிமினேட் ஆகி வெளியேறினர். அதேபோல் வைஷ்ணவி போன வாரம் எலிமினேட் ஆகி சீக்ரட் ரூம்முக்குள் அடைத்து வைக்கப்பட்டார்.



இந்நிலையில், பிக்பாஸ் இந்த வார டாஸ்க்கை ஹவுஸ்மேட்டுகளுக்கு வழங்கினார். அதில், இன்றுமுதல் பிக்பாஸ் வீட்டுக்குள் சர்வாதிகார ஆட்சி அமலுக்கு வருகிறது. இந்த சர்வாதிகார ஆட்சியின் ராணியாக ஐஸ்வர்யாவும், ராணியின் பாதுகாவலராக டேனியும், ராணியன் ஆலோசகராக ஜனனியும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதில் சர்வாதிகாரியாக மாறிய ஐஸ்வர்யாவுக்கு என்று தனி அறை வழங்கப்பட்டது. அந்த அறையில் உள்ள பிளாஸ்மா டிவியில் ஹவுஸ் மேட்டுகள் புறம் பேசும் காட்சியை பிக்பாஸ் போட்டுக்காட்டினார். இதில் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யாவுக்கு மேலும் ஒரு உத்வேக அன்பளிப்பை பிக்பாஸ் வழங்கினார். அது நீங்கள் இந்த டாஸ்க்கில் சிறந்த சர்வாதிகாரியாக செயல்பட்டால் உங்களை அடுத்தவார எலிமினேஷனில் இருந்து நீக்கப்படும் என்றார்.

இதில் மகிழ்ச்சியடைந்த சர்வாதிகார ராணி ஐஸ்வர்யா, முதலில் பாலாஜியை குறிவைத்தார். யாரும் எதிர்பார்க்காத விதமாக பாலாஜி மீது குப்பை தொட்டியில் உள்ள குப்பையை கொட்ட சொன்னார். அனைவரும் ஸ்தம்பித்து போக தானே குப்பை தொட்டியை எடுத்து பாலாஜி மீது கொட்டினார். இது ஹவுஸ்மேட் மட்டுமல்லாத பார்ப்போரையும் கலங்க வைத்தது.

அதேபோல் பாலாஜி தூங்கும் போது அவர் முன் சென்று அவருக்கு எரிச்சல் மூட்டும் விதமாக இரண்டு கரண்டிகளை வைத்து தட்டத்தொடங்கினார்.

பின் சென்ட்ராயனை குறிவைத்து சர்வாதிகார ராணி, அவர் குடித்துக்கொண்டிருந்த காபியை வாங்கி, யாரை கேட்டு குடிக்கிறீர்கள் என்று அதை கீழே ஊத்தினார். இதில் ஆத்திரமடைந்த சென்ட்ராயன் ஐஸ்வர்யாவை திட்ட தொடங்க, இருவரும் மாறி மாறி திட்டிக்கொண்டனர்.

ஒருகட்டத்தில் ஐஸ்வர்யா, சென்ட்ராயனை நாய் என்று கூற சென்ட்ராயன் கை ஓங்கிக்கொண்டு வந்துவந்தார். பின் தன் கோபத்தை கட்டுபடுத்தி உள்ளே சென்றார். விடாமல் பின் தொடர்ந்த ஐஸ்வர்யா, என்னை அடி பார்ப்போம் என்று மீண்டும் வம்புக்கு இழுத்தார்.

ராணியின் அடுத்த டார்கெட் சாரிக், பிரபல வில்லன் ரியாஸ்கானின் மகனான சாரிக்கிடம், நீ என்கூட பேசுனா உங்க குடும்ப மரியாதை கெட்டுவிடும்னு எல்லாரும் சொல்றாங்க, அப்ப எங்க குடும்பத்துக்கு மரியாதை இல்லையா என்று அவரின் துணிகள் அனைத்தையும் நீச்சல்குளத்தில் தூக்கி எரியவைத்தார். மேலும் தன் சிலையை உடைப்பேன் என்ற கூறிய சாரிக்கை தன் சிலையை துடைத்து பாதுகாக்கும் பொறுப்பை வழங்கினார். தன் மீது காட்டம் காட்டிய அனைவரையும் வச்சு செய்யப்போறேன் என்று ஐஸ்வர்யா செயல்பட்டு வந்தது நன்கு தெரிந்தது. மேலும் போன சீசனில் ஓவியா ஆர்மி போல் இந்த சீசனில் ஐஸ்வர்யா ஹேட்டர்ஸ் வளர்ந்து வருகின்றனர்.