1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (14:58 IST)

பிரிந்த பின்னரும்... சமந்தா போட்ட திருமண நாள் பதிவு!

சமந்தா கடந்த ஆண்டு தனது திருமண நாளில் பதிவிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இருவரும் கடந்த 2 ஆம் தேதி விவாகரத்தை அறிவித்தனர். இந்நிலையில் நேற்று சமந்தா - நாக சைதன்யாவின் 4 வது ஆண்டு திருமண நாள் ஆகும். 
 
இதனால் சமந்தா கடந்த ஆண்டு தனது திருமண நாளில் கணவர் நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நீ எனக்கானவன் நான் உனக்கானவள். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தது தற்போது வைரலாகி வருகிறது.