வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva

ரூ.200 கோடி ஜீவனாம்சம்: சமந்தா சொன்னது என்ன தெரியுமா?

நடிகை சமந்தா தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்து விட்டதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்ததை அடுத்து அவருக்கு நாகார்ஜுனா குடும்பத்தினர் ரூபாய் 200 கோடி ஜீவனாம்சம் அளிக்க முன் வந்ததாகவும் அதனை சமந்தா வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப் படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் வாழ்க்கை நேற்றுடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது
 
நேற்று தங்கள் சமூக வலைதளங்களில் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் பிரிய போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த அறிவிப்பு சமந்தா ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாகார்ஜுனா குடும்பத்தினர் ஜீவனாம்சமாக சமந்தாவுக்கு ரூபாய் 200 கோடி கொடுக்க முன் வந்ததாகவும் ஆனால் அந்த பணத்தை சமந்தா பெற மறுத்து விட்டதாகவும் தன்னை தான் எப்படி காப்பாற்றிக்கொள்வது என்று தனக்குத் தெரியும் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.