திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 17 ஜனவரி 2019 (07:19 IST)

பேட்ட ஸ்டைலில் கலக்கிய பிரபல நடிகை: வைரலாகும் வீடியோ

நடிகை அதுல்யா ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
காதல் கண் கட்டுதே, ஏமாலி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகப்பிரபலமான நடிகை அதுல்யா ரவி வேஷ்டி சட்டையுடன் பொங்கலை கொண்டாடியுள்ளார்.  கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உதவ வேண்டும் எனவும் நம் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை அழியாமல் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் பேட்ட படத்தில் ரஜினி ஸ்டைலாக நடந்து வருவது போல, அவரும் ஸ்டைலாக வேஷ்டி சட்டையுடன் நடந்துள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, சும்மா ஒரு முயற்சி என கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் அதுல்யாவை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.