வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 2 ஜூலை 2020 (08:04 IST)

லாக்டவுனில் பேக்கரி பிசினஸ் துவங்கிய நடிகை வரலக்ஷ்மி!

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.

நடிப்பது மட்டும் தன் கடமை என்று நிறுத்தி விடாமல் தொடர்ந்து சமூகத்திற்கு எதிராக நடக்கும் அவலங்களை தட்டி கேட்பது, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார். இவருடைய துணிச்சலான நடிப்பும், வெளிப்படையான பேச்சும் அநேகரை கவர்ந்திருக்கின்றது.

இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதுமில்லாத நிலையில் வரலக்ஷ்மி  லைஃப் ஆஃப் பை  என பெயரிடப்பட்ட ஒரு புதிய பேக்கரி கம்பெனியை துவங்கியுள்ளார்.  இதுபற்றி அவர் கூறிய அவர், இது ஒரு பொழுதுபோக்கு விஷயமாகத்தான் செய்தேன். தற்போது அது ஒரு சிறிய பிசினஸாக வளர்ந்து இருக்கிறது.  நான் எதிர்பார்க்காத வகையில் 100 ஆர்டர்களை முடித்துள்ளேன். ஆர்டர் கொடுத்த அனைவருக்கும் நன்றி என மிகுந்த மகிழ்ச்சியோடு பதிவிட்டிருக்கிறார். வேலை இல்லை , வேலை இல்லை என நொண்டி சாக்கு சொல்பவர்களுக்கு மத்தியில் ஒரு பிரபல நடிகையின் இந்த செயல் பலருக்கும் பாடமாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் வரலக்ஷ்மி..