திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 12 மே 2020 (08:00 IST)

குட்டி பாப்பாவாக நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் - வைரலாகும் கியூட் போட்டோ!

போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். தொடர்ந்து தாரை தப்பட்டை, மாரி 2 , சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 ,  போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்தார்.

நடிப்பது மட்டும் தன் கடமை என்று நிறுத்தி விடாமல் தொடர்ந்து சமூகத்திற்கு எதிராக நடக்கும் அவலங்களை தட்டி கேட்பது, பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து சக்தி என்ற பெண்களுக்கு பாதுகாப்பான அமைப்பையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அன்னையர் தினத்தன்று தனது இன்ஸ்டாகிராமில் அம்மாவுடன் கைக்குழந்தையாக இருக்கும் போட்டோ முதல் தற்போது வரை எடுத்துக்கொண்ட அனைத்து போடோக்களையும் வெளியிட்டு  "நிறைய பேர் என்னிடம் கேட்கும் கேள்வி..  உங்களுக்கு எங்கிருந்து  இவ்வளவு தைரியம் வந்தது என்று. அதற்கு பதில் என் அம்மாவிடம்   0.21இருந்து தான். தனி ஆளாக எங்களை வளர்த்தார். அவர் ஒரு புலி. கஷ்டமான சூழ்நிலையிலும் உதவி கேட்டு வருபவர்களுக்கும், விலங்குகளுக்கும் உதவி செய்யும் குணம் படைத்தவர். அவருடைய காதலுக்கு எல்லைகள் இல்லை .. அவளுக்கு இடைவெளி கிடைக்காது..அவள் எப்போதுமே எனக்கு சரியானது, தவறு என்று கற்பித்தாள் .
லவ் யூ மம்மி" என்று மிகுந்த உணர்ச்சியுடன் பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்து கூறியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Everybody keeps asking me how are you so brave..?? Well here’s the answer my inspiration.. my rock.. she raised us girls single handedly.. sacrificed her life for us..managed to help every single person and animal she knows.. fierce as a tiger when it comes to protecting us..her love has no boundaries.. she gets no break..and she always taught me right and wrong.. no mater who it is if they are wrong they are wrong.. she is my mother.. my super woman.. sometimes I honestly don’t know where she gets the strength.. till today anything u tell her it gets done like magic..ur an inspiration to me and to all those who know and love you..i love u mummy you are my everything.. @devi.chaya23 if I manage to become half the woman you are I’ll consider myself a super woman..!! We can never repay what u have done for us.. but I will certainly try until my last day to keep u smiling.. love u mummy #happymothersday❤️