1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 28 மே 2019 (15:02 IST)

நடிகர் நானிக்கு படுக்கை வீடியோவை சமர்ப்பித்த ஸ்ரீரெட்டி! வைரலாகும் வீடியோ!

கடந்த ஆண்டு கோலிவுட், டோலிவுட்டில் உள்ள பல முன்னணி நடிகர்கள் மீது சரமாரியான பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியதுடன், அரை நிர்வாண போராட்டத்தை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தான்  தான்  நடிகை ஸ்ரீ ரெட்டி.  
 
தெலுங்கு திரையுலகில் அடுக்கடுக்காய் பல இயக்குனர்கள், நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டைக் கூறி பரபரப்பை கிளப்பினார். இதனால் அவரை தெலுங்கு சினிமா உலகினர் ஓரங்கட்டிவிட சென்னைக்குள் தஞ்சம் புகுந்தார் ஸ்ரீரெட்டி. 
 
தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் நானியையும் குறிவைத்து தாக்கினார்  ஸ்ரீரெட்டி.  சமீபத்தில் கூட நானி பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்துள்ளார் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். மேலும் தெலுங்கில்  நானி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீரெட்டி பங்குபெறுவதாக இருந்தது. ஆனால் அவர் பங்கேற்றால் நான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டேன் என நானி கூறியதால் அவர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்கமுடியாமல் போயிற்று. 
 
இந்நிலையில் தற்போது மீண்டும் நானியை சீண்டியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. டிக் டாக்கில் படுமோசமான படுக்கை விடியோ ஒன்றை பதிவிட்டு இதனை நடிகர் நானிக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வைரலாகிவருகிறது.