பஸ்சை மடக்கி அட்ராசிட்டி... வைரலாகும் அஜித் ரசிகர்களின் அலப்பறை!
அஜித் ரசிகர்கள் சிலர் பேருந்துக்கு பால் ஊற்றி அலப்பறையில் ஈடுப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.
அஜித் படம் வெளியாகும் போதெல்லாம் அவரது ரசிகர்கள் பேனா்களுக்கு பால் ஊற்றுதல், கற்பூரம் கொளுத்துதல், மேள, தாளங்கள் முழக்கம் என ஏகபோகமாக கொண்டாட்டங்களை மேற்கொள்ளுவர்.
அந்த வகையில் நடிகர் அஜீத்தின் புகைப்படம் இருந்ததற்காக அவரது ரசிகா்கள் பேருந்துக்கு பாலூற்றிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆம், தனியார் பேருந்து ஒன்றில் நடிகர் அஜீத்தின் புகைப்படம் ஒட்டப்பட்டு இருந்ததால் அந்த பேருந்துக்குள் பயணிகள் இருக்கும் போதே பால் ஊற்றி அலப்பறையி ஈடுப்பட்டுள்ளனர்.