தண்ணீருக்கடியில் காதலனுடன் போட்டோஷூட் நடத்திய நடிகை! வைரலாகும் புகைப்படம்!
சின்னத்திரை நடிகை சரண்யா தனது காதலர் ராகுலுடன் நீருக்கடியில் ரொமாண்டிக்கான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரை ரசிகர்கள் மனதில் ஆஸ்தான நாயகியாக இருப்பவர் சரண்யா. இவர் தமிழின் பல முன்னணித் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துள்ளார். ஒன்றிரண்டு படங்களிலும் தலைகாட்டியுள்ளார். இந்நிலையில் இவர் தன் காதலர் ராகுலுடன் ரொமாண்டிக்கான மற்றும் வித்தியாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீருக்கடியில் இருவரும் இருப்பது போல எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.