ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2023 (08:44 IST)

சம்பளத்துக்காக கெஞ்சக் கூடாது… பாரபட்சம் குறித்து சமந்தா!

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக இருப்பவர் குணசேகர். இவர் பல ஹிட் படங்களை இயக்கியுள்ள நிலையில் இப்போது காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படத்தை உருவாக்க உள்ளார். அந்த படத்தில் ஷகுந்தலை கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவும் மலையாள நடிகர் தேவ் மோகனும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படம் நவம்பர் மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் இப்போது ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகளில் சமந்தா ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவர் கலந்துகொண்ட ஒரு நேர்காணலில் சினிமாவில் சம்பளம் பாரபட்சமாக வழங்கப்படுவது குறித்து பேசியுள்ளார். அதில் “சம்பளத்துக்காக கெஞ்சக் கூடாது.  தயாரிப்பாளர்கள் தாங்களாகவே முன் வந்து அதைக் கொடுக்க வேண்டும். தீவிர உழைப்புக்குப் பலன் கிடைக்கும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.