40 ஆண்டு சினிமா பயணம் - பிரம்மாண்ட மேடையில் மீனாவுக்கு மரியாதை!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை மீனா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை மீனா திரைத்துறைக்கு வந்த 40 ஆண்டுகள் நிறுவைடைந்ததை பிரம்மாண்ட விழாவாக கொண்டாடியுள்ளார். அவரின் 40 ஆண்டு சாதனையைப் பெருமைப்படுத்த ரஜினி , சரத்குமார் என பிரபல நடிகர், நடிகைகள் ஒன்று கூறி அவரை பெருமைப்படுத்தினர். அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட மேடையில் மீனா ராணி போன்று வரவேற்கப்பட்டார். இதோ அந்த வீடியோ: