வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2023 (19:15 IST)

வெள்ளை தாடி, வயதான தோற்றம் - மனைவியுடன் ஜெயம்ரவி ரொமான்ஸ்!

நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் இருக்கும் ரொமான்டிக் புகைப்படம் இணையத்தில் வைரல்!
 
பெண் ரசிகைகள் கூட்டம் அதிகம் உள்ள நடிகர்களில் ஒருவரான ஜெயம்ரவி அப்பா திரைப்படத் தொகுப்பாளர், அண்ணன் திரைப்பட இயக்குனர் என மிகப்பெரும் நட்சத்திர குடும்பத்தில் பிறந்து  திறமையால் முன்னணி நடிகரானார். 
 
வாரிசு நடிகராக இருந்தாலும் திறமையால் உச்சத்தை தொட்ட இவர் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி சூப்பர் ஹிட் கொடுத்ததால் ஜெயம் ரவி என அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து மழை , தனி ஒருவன் , ரோமியோ ஜூலியட் , எங்கேயும் காதல்,  தாம் தூம், சந்தோஷ் சுப்பிரமணியம் என பல ஹிட் படங்களில் நடித்து புகழ் பெற்றார். 
 
இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவ்வப்போது மனைவியடன் அழகான ரொமான்டிக் போட்டோக்கள் வைரலாகும். அந்த வகையில் தற்போது வெள்ளை தாடி, நரை முடி என மனைவியுடன் ரொமான்டிக் போஸ் கொடுத்து அனைவரது கவனத்தை ஈர்த்துவிட்டார்.