1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 20 மே 2021 (07:43 IST)

புயல் சேதங்களுக்கு நடுவே போஸ் கொடுத்து போட்டோஷூட்: பிரபல நடிகைக்கு கண்டனம்!

புயல் சேதங்களுக்கு நடுவே போஸ் கொடுத்து போட்டோஷூட்: பிரபல நடிகைக்கு கண்டனம்!
சமீபத்தில் டவ்தேவ் புயல் ஒருசில மாநிலங்களைத் புரட்டிப்போட்டது என்பதும் குறிப்பாக குஜராத் மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி என்பதும் தெரிந்ததே. இந்த புயல் காரணமாக சுமார் 6000 கிராமத்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்காக ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதியை பிரதமர் மோடி ஒதுக்கி உள்ளார் என்பதையும் பார்த்தோம்
 
இந்த நிலையில் புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு நடுவே நடனமாடியும் வித்தியாசமான போஸ் கொடுத்த நடிகை தீபிகா சிங் போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார் இந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளதை அடுத்து இணையவாசிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர் 
 
மேலும் புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது அதுவாகவே கடந்து போகும் என்று நடிகை தீபிகா சிங் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதற்கும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் ஆயிரக்கணக்கான மக்கள் புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த புயலை வைத்து போட்டோ ஷூட் எடுத்த நடிகைக்கு கண்டங்கள் குவிந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது