திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 19 மே 2021 (08:42 IST)

டவ்-தேவ் புயலால் 6 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு: பிரதமர் இன்று நேரில் ஆய்வு

சமீபத்தில் அரபிக்கடலில் உருவான டவ்-தேவ் புயல் கேரளா குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் புரட்டிப்போட்டது என்பதும் குறிப்பாக குஜராத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கிராமங்கள் பெரும் சேதம் அடைந்தன என்றும் தகவல்கள் வெளிவந்தன
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி குஜராத் மாநிலத்தில் டவ்-தேவ் புயால் 6 ஆயிரம் கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் மீண்டும் மின்சாரம் வழங்க மின் துறையினர் இரவு பகலாக பணி செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் டவ்-தேவ் புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்களை இன்று பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இன்று அவர் குஜராத் செல்லவிருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது