1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 26 ஜனவரி 2021 (17:56 IST)

தலைப்பா கட்டோடு குடியரசு தின வாழ்த்து கூறிய ஆத்மிகா!

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் இன்று நாட்டின் 72வது  குடியரசு தின விழாவை முன்னிட்டு விவசாயி அணியும் தலைப்பா கட்டுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு " வேற்றுமையில் ஒற்றுமையும், பன்முக கலாச்சாரமுமே நம் நாட்டின் இருகண்கள். அவற்றை பாதுகாப்பதே நமது இன்றைய தேவையும் கடமையுமாகும். இச்சிறப்பு வாய்ந்த நாளில் அனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்" என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஒரு நடிகைக்கு இவ்வளவு தேசப்பற்று இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aathmika