சான்ஸ் கிடைச்ச டீ ஷர்ட்டை கழட்டவும் செய்வாங்க! – நடிகை ஆர்த்தி எச்சரிக்கை!
Prasanth Karthick|
Last Modified புதன், 9 செப்டம்பர் 2020 (17:10 IST)
தமிழ் திரையுலகில் இந்திக்கு எதிராக டீ-சர்ட் அணிந்து பலர் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து நடிகை ஆர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக கூறிய நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் “இந்தி தெரியாது போடா” என்ற வாசகம் அடங்கிய டீ சர்ட்டுகளை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். தொடர்ந்து ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வந்தன.
இந்த நிலையில் திரை பிரபலங்களின் இந்த எதிர்ப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள காமெடி நடிகை ஆர்த்தி “நமக்கு தமிழ் உயிர்மூச்சு போல.. அவங்களுக்கு அவங்க மொழி. அதனால் பழிப்பது தவறு விருப்பம் இருந்தால் படிப்போம். இன்று இந்திக்கு எதிராக டீசர்ட் அணிபவர்கள் இந்தி பட வாய்ப்புக்காக அதை கழற்றவும் செய்வார்கள் ஜாக்கிரதை” என கூறியுள்ளார்.