1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:45 IST)

சொகுசு காருக்கு வரியை செலுத்திய நடிகர் விஜய்!

நடிகர் விஜய் தனது சொகுசு காருக்கான நுழைவு வரியைக் கட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழ் நடிகர் விஜய் கடந்த 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்திலிருந்து வாங்கினார். இந்த காருக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் வரியில் தளர்வு அளிக்க கோரி நடிகர் விஜய் அப்போது மனு அளித்திருந்தார். மனு அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மனு மீதான விசாரணையில் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதித்தது. இந்த அபராதத்தை முதல்வர் கோவிட் பொது நிவாரண நிதியில் இரண்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தற்போது சில நிபந்தனை விதித்துள்ள விஜய் தரப்பு, என் காருக்கு வரி கட்ட தயார். ஆனால், தனி நீதிபதி கருத்துகளை நீக்க வேண்டும். அவர் விதித்த அபராத தொகை 1 லட்சத்தையும் நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இது சம்மந்தமான விசாரணை நடந்துவரும்  நிலையில் இப்போது நுழைவு வரியை அவர் செலுத்தி விட்டாராம். ஏற்கனவே 8 லட்சம் கட்டிவிட்ட அவர் இப்போது 32 லட்சம் ரூபாய் செலுத்தி விட்டாராம். இது சம்மந்தமாக இணையத்தில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.