1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (22:13 IST)

முன் அறிவிப்பு இன்றி பணி நிறுத்தம்: நர்சுகள் அதிர்ச்சி

நெல்லை மாவட்டத்தில் முன்னறிவிப்பின்றி கொரோனா வார்டில் வேலை செய்த நர்சுகள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர்களது ஊதியமும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது 
 
கொரோனா காலகட்டத்தில் கூடங்குளம் அரசு மருத்துவமனையில் தற்காலிக நர்ஸ்கள் சிலர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதால் திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
 
இதனால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாகவும் தங்களுக்கு மூன்று மாத காலம் காலக்கெடு பற்றி எதுவும் கூறவில்லை என்றும் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் 
 
அதுமட்டுமின்றி கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய எங்களுக்கு சம்பளமும் இன்னும் வழங்கவில்லை என்று அவர்கள் தெரிவித்து வருகின்றனர்