புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (07:18 IST)

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நடிகர் வையாபுரி

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் நடிகர் வையாபுரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 
 
கமல்ஹாசன் நடித்த தசாவதாரம், உத்தமவில்லன், மும்பை எக்ஸ்பிரஸ், பாபநாசம் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
நடிகர் வையாபுரி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தனக்கென ஒரு பாணியுடன் நகைச்சுவையை வெளிப்படுத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் வையாபுரி அவர்களுக்கு வெப்துனியா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்