1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 செப்டம்பர் 2021 (13:30 IST)

பெரியார் பிறந்த நாள் அன்று ராகுல்காந்தியின் டுவிட்!

தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாணவர்கள் பெண்கள் என அனைத்து தரப்பினரும் சமூக வலைதளங்களில் பெரியாரின் பிறந்த நாள் குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து அவருடைய கொள்கையை குறித்து பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
குறிப்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் உள்பட பலரும் பெரியாரின் பெருமைகளை தங்களது டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்து வருகின்றனர். 
 
இந்த வகையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பெரியாரின் பெருமை குறித்து பதிவுசெய்துள்ளார். சுதந்திரம் தைரியம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை நினைக்கும் போதெல்லாம் பெரியாரின் பிறந்த நாள் தான் எனக்கு ஞாபகம் வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த டுவிட் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது