திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (07:11 IST)

கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பணம் செய்த சிவகார்த்திகேயன்: நெகிழ்ச்சியான டுவீட்

கலைமாமணி விருதை தாய்க்கு சமர்ப்பணம் செய்த சிவகார்த்திகேயன்
தமிழக அரசு சமீபத்தில் கலைமாமணி விருதை அறிவித்தது என்பதும் சிவகார்த்திகேயன் யோகிபாபு சரோஜாதேவி ராமராஜன் உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
மேலும் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலைமாமணி விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் தனது கையால் விருதை வழங்கினார். இந்த நிலையில் தமிழக முதல்வரிடம் இருந்து கலைமாமணி விருதைப் பெற்ற சிவகார்த்திகேயன் தனது தாயாருக்கு அந்த விருதை சமர்ப்பணம் செய்து அவரது காலில் விழுந்து ஆசி வாங்கினார் 
 
இதுகுறித்த புகைப்படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் கலைமாமணி விருது குறித்து கூறியதாவது:
 
சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்’ என்று கூறியுள்ளார்.