1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 20 ஏப்ரல் 2015 (16:33 IST)

விரைவில் வெள்ளித்திரையில் நாரதன்

கோவையிலிருந்து, தன் வேலைக்காகவும், தன் மாமனையும் அவரது மகளை பார்ப்பதற்காகவும் ரயிலில் சென்னைக்கு வரும் கதாநாயகன் விஷ்ணு (நகுல்), சில ரவுடிகளால் துரத்தப்படும் நாயகியை காப்பாற்றுகையில், எதிர்பாராவிதமாக பெரிய பிரச்சனையில் சிக்கி கொள்கிறான்.
 
நாரதன் என்ற கதாபாத்திரமாக படத்தில் அறிமுகமாகும் பிரேம்ஜி, விஷ்ணுவின் தாய்மாமன் குடும்பத்துக்குள் புகுந்து, பல கலகங்களை ஏற்படுத்தி, இறுதியில் 'நாரதன் கலகம் நன்மையில் முடியும்' என்னும் வாக்கியத்தை நினைவுகூறும் வகையில், அனைத்து பிரச்சனைகளையும் எவ்வாறு தீர்த்து வைக்கிறார் என்பதை நகைச்சுவையுடன் ஆக்சன் கலந்து கூறும் படமே, நாரதன்.
 
இப்படத்தில் நகுல், நிகிஷா பட்டேல், ஸ்ருதிராமகிருஷ்ணா, நாயகன் – நாயகியராக நடிக்க, கலகலப்பான பாத்திரங்களில் பிரேம்ஜி, ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, வையாபுரி, பவர்ஸ்டார் சீனிவாசன், பாண்டு, கும்கி அஸ்வின் என்ற ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளனர்.
 
மேலும், பஞ்சு சுப்பு, நிழல்கள் ரவி, கவிதா, மீரா கிருஷ்ணன், சீஸர் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில், 'எப்படி மனுசுக்குள் வந்தாய்' பட நாயகன் விஷ்வா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தின் ஆரம்பத்தில், ரயிலில் நகுல் ஆடிப்பாடும் ஒரு குத்துப்பாடல் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
 
சலீம் படத்தில் 'மஸ்காரா' பாட்டுக்கு நடனமாடிய அஸ்மிதா, மும்பை அழகியுடன் சேர்ந்து ஆடும் ஒரு பாடல், பிரம்மாண்டமான செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதியில், நகுல் ரவுடிகளுடன் மோதும் ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சி, பின்னி மில்லில் 10 நாட்களாக படமாக்கப்பட்டு பரபரப்பான முறையில் வந்திருக்கிறது.
 
இதுதவிர, நகுல் மற்றும் ஸ்ருதி பாடும் ஒரு டுயட் பாடல், அழகுக்கு அழகு சேர்க்கும் அந்தமானில் படமாக்கப்பட்டுள்ளது. கோவையிலிருந்து, தன் வேலைக்காகவும், தன் மாமனையும் அவரது மகளை பார்ப்பதற்காகவும் ரயிலில் சென்னைக்கு வரும் கதாநாயகன் விஷ்ணு (நகுல்), சில ரவுடிகளால் துரத்தப்படும் நாயகியை காப்பாற்றுகையில், எதிர்பாராவிதமாக பெரிய பிரச்சனையில் சிக்கி கொள்கிறான்.
 
நாரதன் என்ற கதாபாத்திரமாக படத்தில் அறிமுகமாகும் பிரேம்ஜி, விஷ்ணுவின் தாய்மாமன் குடும்பத்துக்குள் புகுந்து, பல கலகங்களை ஏற்படுத்தி, இறுதியில் 'நாரதன் கலகம் நன்மையில் முடியும்' என்னும் வாக்கியத்தை நினைவுகூறும் வகையில், அனைத்து பிரச்சனைகளையும் எவ்வாறு தீர்த்து வைக்கிறார் என்பதை நகைச்சுவையுடன் ஆக்சன் கலந்து கூறும் படமே, நாரதன்.
 
இப்படத்தில் நகுல், நிகிஷா பட்டேல், ஸ்ருதிராமகிருஷ்ணா, நாயகன் – நாயகியராக நடிக்க, கலகலப்பான பாத்திரங்களில் பிரேம்ஜி, ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, வையாபுரி, பவர்ஸ்டார் சீனிவாசன், பாண்டு, கும்கி அஸ்வின் என்ற ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளனர்.
 
மேலும், பஞ்சு சுப்பு, நிழல்கள் ரவி, கவிதா, மீரா கிருஷ்ணன், சீஸர் மனோகர் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில், 'எப்படி மனுசுக்குள் வந்தாய்' பட நாயகன் விஷ்வா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
படத்தின் ஆரம்பத்தில், ரயிலில் நகுல் ஆடிப்பாடும் ஒரு குத்துப்பாடல் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது.
 
சலீம் படத்தில் 'மஸ்காரா' பாட்டுக்கு நடனமாடிய அஸ்மிதா, மும்பை அழகியுடன் சேர்ந்து ஆடும் ஒரு பாடல், பிரம்மாண்டமான செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் இறுதியில், நகுல் ரவுடிகளுடன் மோதும் ஒரு ஆக்ரோஷமான சண்டைக்காட்சி, பின்னி மில்லில் 10 நாட்களாக படமாக்கப்பட்டு பரபரப்பான முறையில் வந்திருக்கிறது.
 
இதுதவிர, நகுல் மற்றும் ஸ்ருதி பாடும் ஒரு டுயட் பாடல், அழகுக்கு அழகு சேர்க்கும் அந்தமானில் படமாக்கப்பட்டுள்ளது.