பொன்னியில் செல்வன்-1 படத்தில் நடிகர் கமல்ஹாசன்?
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள பொன்னியில் செல்வன் படத்தில் கமல் உள்ளதாக ரசிகர்கள் கூறிய நிலையில் இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகிறது.
மணித்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு மிகச்சரியாக வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒரு நிமிடம் 20 வினாடிகள் உள்ள இந்த டீசரில் பிரம்மாண்டமான காட்சிகளை பார்த்து கோலிவுட் பட உலகினர் மற்றும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த டீசர் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இதுவரை பல மில்லியர் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இந்த நிலையில். பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கமல் பின்னணி குரல் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது, அவரது கம்பீரமான குரல் யாருக்குப்பொருத்தமாக இருக்கும் என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.