திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 17 ஜூலை 2021 (23:23 IST)

இளம் நடிகர்களை வரவேற்ற நடிகர் கமல்ஹாசன்...

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ள விக்ரம் படத்தில் அவருடன் நடிக்கவுள்ள திறமையான நடிகர்களை கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.

கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி முதல் முதலாக இணைந்து நடிக்கும் ’விக்ரம்’ திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்று அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்ததே

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் ’விக்ரம்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று முதல் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. நேற்றைய  முதல் நாள் படப்பிடிப்பில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரும் கலந்து கொண்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

இன்று தொடங்கும் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்கள் தொடரும் என்றும் இந்த படத்தை 3 மாதத்தில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இது ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தில் பணியாற்றவுள்ள  இளம் திறமைமிக்க நடிகர்கள் விஜய்சேதுபதி, பகத் பாசில், மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோரை வரவேற்றுள்ளார்.

இந்த டுவிட்டர் சமூக வலைதளத்தில் ஆயிரக்கணக்கானோரால் லைக் செய்யப்பட்டுள்ளது.